Saturday, 28 November 2015

அறிவித்தபடி அரையாண்டுத் தேர்வு மற்றும் பருவத் தேர்வை முடித்து, அரையாண்டு விடுமுறை விட, பள்ளிகளுக்கு உத்தரவு

அரையாண்டுத் தேர்வு மற்றும் பருவத் தேர்வை ஏற்கனவே அறிவித்தபடி முடித்து,

 அரையாண்டு விடுமுறை விட, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


மழை வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில்,
 12 வேலை நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
விடுமுறையால் அரையாண்டுத் தேர்வு தேதியை ஒரு வாரம் தள்ளி வைத்து, விடுமுறை நாட்களைக் குறைக்க அதிகாரிகள் ஆலோசித்தனர். ஆனால், விடுமுறையை ரத்து செய்யக் கூடாது என பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்ததால், அரையாண்டுத் தேர்வை திட்டமிட்டபடி நடத்த, அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை மாலை அவசர, அவசரமாக பள்ளிக் கல்வித் துறையின் மாவட்ட 
முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி, ஏற்கனவே அறிவித்த படி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 -விற்கு டிச.7-ம் தேதியும்; 
10ம் வகுப்புக்கு டிச.9-ம் தேதியும், மாற்றமின்றி தேர்வு நடத்தி முடிக்க வேண்டும்.
 இதேபோல், சமச்சீர் கல்வி பாடத் திட்டப்படி, 9-ம் வகுப்புக்கு டிச.9-ம் தேதியும்,
 6ம் வகுப்பு முதல், 8-ம் வகுப்புகளுக்கு டிச.14-ம் தேதியும் இரண்டாம்
 பருவத் தேர்வுகளை நடத்த வேண்டும். அனைவருக்கும் டிச.22-ல் தேர்வுகள்
 முடிக்கப்படுகிறது.

இதையடுத்து, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான தொடர் விடுமுறை அறிவிக்கப்படும்
 என அதிகாரிகள் தெரிவித்தனர்.

NMMS தேர்வு விண்ணப்ப அறிவிப்பு - 2015- 16



NMMS EXAMINATION - 2016

NMMS தேர்வு விண்ணப்ப அறிவிப்பு

தற்போது எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் எழுதலாம்

SC / ST மாணவர்கள் 7ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்களும், மற்ற 
மாணவர்கள் 55% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்
30.11. 2015 to 11. 12. 2015க்குள் மாணவர்கள் விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ளலாம்

15. 12. 2015க்குள் தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்
7. 12. 2015 to 19.12. 2015க்குள் தலைமை ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்
விண்ணப்பக் கட்டணம் ரூ.50

Friday, 27 November 2015

"wi-fi"ஐ விட நூறு மடங்கு அதிவிரைவான வயர்லெஸ் டெக்னாலஜி "li-fi"

தற்போது பயன்படுத்தும் "wi-fi"ஐ  விட நூறு மடங்கு அதிவிரைவான வயர்லெஸ் இன்டர்நெட் டெக்னாலஜி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் "li-fi" ஆகும். இதன் சிறப்பு,  ஒரு நொடிக்கு 1ஜிகாபைட் டேட்டாக்களை அனுப்பக்கூடியது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? 
 
         இந்த வேகத்தை பயன்படுத்தி மிகப்பெரிய ஆல்பம், அதிக டெஃபனிஷன் கொண்ட படங்கள் மற்றும் வீடியோக்களை கண்ணிமைக்கும் நொடியில் டவுன்லோடு செய்யலாம். 

இந்த வேகத்ற்கு காரணம் இந்த டெக்னாலஜியில் LED லைட்டுகளை பயன்படுத்தப்படுவதே. இதற்காக கண்ணால் காணக்கூடிய ஒளி யை தகவல் தொடர்புக்காக பயன்படுத்துகிறது. இந்த நெட்வர்க் மிகவும் பாதுகாப்பானதும் கூட.





இதனை மிகவும் சிறிய சிப் பில் வடிவமைக்க முடியும் என்பது இதன் சிறப்பம்சம். இப்போதுள்ள டெக்னாலஜியில் இது மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

எடின்பர்க் யுனிவர்சிட்டி பேராசிரியர் 'ஹரால்டு ஹாஸ்' ன் வழிகாட்டுதலி்ல் அமைக்கப்பட்ட குழு இந்த சாதனையை படைத்துள்ளது. தரைத்தளத்திற்கு இணையாக  இந்த ஒளி பரவுகிறது. அதனால்   நெட்வொர்க்கின் திறனை இது அதிகப்படுத்துகிறது. ஆனால் இதில் பயன்படுத்தப்படும் ஒளி அலைகள் சுவர்களில் ஊடுருவ இயலாது என்பது இதன் ஒரு  குறை.

இது குறித்து பேராசிரியர் ஹாஸ் கூறுகையி்ல், " இதன் எளிய உள்கட்டமைப்பு இதனை பரவலாக பயன்படுத்தப்படும்படி வழிவகை செய்கிறது. இனி வரும் காலங்களில் ஒளி விளக்குகளால் மட்டுமல்லாமல், இந்த LI-FI மூலம் உலகம் பசுமையாக மின்னப்போகிறது" என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

தற்போதைய வேகமான உலகம்,  இன்னும் அதிவிரைவான உலகமாக மாறப்போகிறது என தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிப்போர் அரசு இ-சேவை மையங்களில் பதிவு செய்ய வசதி


     தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்போர் அரசு இ-சேவை மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
      தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், அரசு இ-சேவை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. இந்த மையங்கள் மூலமாக தமிழக அரசின் வருவாய்த் துறை மற்றும் சமூக நலத்துறை சார்ந்த பல்வேறு சேவைகள் இணைய வழி சேவை மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்த சேவை மையங்கள் மூலமாக பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறும் வசதி, ஆதார் அட்டை பதிவு செய்யும் போது தெரிவிக்கப்பட்ட செல்லிடைப்பேசி எண்ணை மாற்றும் வசதி மற்றும் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதியும் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில்,  தற்போது புதியதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு நிரந்தரப் பதிவு செய்தல், தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல், விண்ணப்பங்களில் மாறுதல் செய்தல் மற்றும் விண்ணப்பத்தின் நகல் பெறுதல் ஆகிய சேவைகள் புதியதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மையங்களில் நிரந்தரப் பதிவு செய்ய ரூ. 50-ம்,  தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ரூ. 30-ம்,  விண்ணப்பங்களில் மாறுதல் செய்யரூ.5-ம்,  விண்ணப்பங்களில் மாறுதல் செய்து விண்ணப்பத்தின் நகல் பெறரூ.20-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு செலுத்த வேண்டிய நிரந்தரப் பதிவு கட்டணமான ரூ.50  மற்றும் நிர்ணயிக்கப்பட்ட தேர்வுக் கட்டணம் ஆகியவற்றையும் இ-சேவை மையங்களிலேயே செலுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  பணம் செலுத்துவதற்கான ஒப்புகைச் சீட்டையு உடனடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.
எனவே, விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் வழங்கப்படும் இந்த சேவைகளைப் பயன்படுத்தி குறைந்த செலவில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10th Social Science Study Material

12th Study Material - Physics

New Materials:

Prepared by Mr. RAJENDRAN M,
P.G. ASSISTANT IN PHYSICS,
SRM HIGHER SECONDARY SCHOOL KAVERIYAMPOOND

CCE English Study Material

Prepared by Mr. N.ELANGOVAN

B.T. ASST.
GOVERNMENT HIGH SCHOOL
MULLIPET ARNI TK.,
TIRUVANNAMALAI DT., 

DECEMBER MONTH TRAINING FOR PRIMARY AND UPPER PRIMARY TEACHERS.


டிசம்பர் மாதம் Training.. மாதம்....
  • IED Training : - (30.11.2015)to (4.12.2015) - 5 days IED TRAINING for primary teachers
Another 5 days IED training for upper primary teachers 
Another 5 days IED training for Angan wadi
  • SMC Training:- 30.11.2015, 1.12.2015 - 2 days SMC RP training
    9.12.2015 to 13.12.2015 - 3 days SMC TRAINING (1st Batch)
    14.12.2015 to 16.12.2015 - 3 days SMC training (2nd Batch)
CRC Training:-
  •   5.12.2015 - primary CRC 
12.12.2015 - upper primary crc
BRC Training
3 days MATHS TRAINING upper primary teachers

Thursday, 26 November 2015

PHYSICS ONE WORD FOR HSC STUDENT



           


                    12th Physics Materials:
12th Physics All Lessons with Public Exam One word With answer | English Medium | Click here
12th Physics All Lessons Compulsory Problems | English Medium | Click here
12th Physics All Lessons Compulsory Problems | Tamil Medium | Click here

பள்ளி செல்லா குழந்தைகள்

பள்ளி செல்லா குழந்தைகள் விபரம்: 8 ம் வகுப்பு வரை சேகரிக்க உத்தரவு

        எட்டாம் வகுப்பு வரை, பள்ளிகளில் இடையில் நின்ற மாணவர்கள் மற்றும் பள்ளி செல்லா குழந்தைகள் விபரங்களை சேகரிக்க, கல்வி நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

       நம் நாட்டில், 14 வயது வரை, கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என கட்டாயக்கல்விச்சட்டம் வலியுறுத்துவதால், எட்டாம் வகுப்பு வரையில், பள்ளி செல்லா குழந்தைகள் இல்லாத நிலையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
இதற்காக, அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில், அடுத்த கல்வியாண்டுக்கான வரைவு திட்டத்தில், பள்ளி செல்லா குழந்தைகளுக்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட உள்ளது. அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், 'நடப்பு கல்வியாண்டில், எட்டாம் வகுப்பு வரையில், பள்ளியிலிருந்து இடையில் நின்ற மாணவர்களின் விபரங்களையும், பள்ளிக்கு வராமல் உள்ள மாணவர்களின் விபரங்களையும் சேகரித்து, மாவட்ட கலெக்டரின் ஒப்புதலுடன், விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும்' என, அறிவுறுத்தியுள்ளார். அனைவருக்கும் கல்வி திட்ட வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம், இந்த விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், அடுத்த கல்வியாண்டுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் செயல்திட்டம் அமைய உள்ளது. 

Sunday, 22 November 2015

                                        ABL     TAMIL    LOGOS

    




ABL   ENGLISH  LOGOS  


                    
                     

தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை:மீண்டும் காற்றழுத்தத்தாழ்வு நிலை

வங்கக் கடலில் தென்மேற்கு பகுதியில் இலங்கையை ஒட்டி புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி உள்ளதன் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


தமிழகத்தின் சில மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பலத்த மழை பெய்ததால் வெள்ளச் சேதம் ஏற்பட்டது. தற்போது மழை குறைந்து இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் புதுவையிலும் பலத்த அல்லது மிகபலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதாவது அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில், ஓரிருஇடங்களில் பலத்த, மிகப் பலத்த மழையை எதிர்பார்க்கலாம். மேலும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் பலத்த மழை பெய்யும்.சென்னை மாநகரைப் பொருத்தவரை, பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் சில நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DEC MONTH CRC - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 05/12/2015 அன்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 12/12/2015 அன்றும் "REMEDIAL TEACHING FOR LATE BLOOMERS" என்ற தலைப்பில் குருவளமைய பயிற்சி - 

நமது உடலை பற்றி தெரிந்ததும் தெரியாததும்....
* நமது மூக்கினால் 50 ஆயிரம் விதமான வாசனைகளை நுகர முடியும். ஆனால் தூங்கும் போது நமது மூக்கினால் வாசனை பிடிக்க முடியாது.
* நமது மூளை 80 சதவீதம் தண்ணீரால் ஆனது. பகலைவிட இரவில் மூளை சுறுசுறுப்பான இருக்கும். அதிகமாக சிந்தனைகள் தோன்றும். வலி என்ற உணர்வே மூளையின் உதவியால் தான் உணரப்படுகிறது. ஆனால் மூளையில் காயம்பட்டால் வலி தெரியாது.
* சராசரி மனிதன் ஆண்டுக்கு ஆயிரத்து 460 கனவுகள் காண்கிறான். அதாவது தினமும் குறைந்தபட்சம் 4 கனவுகள்.
* நாம் ஒரு அடியை எடுத்து வைக்கும் போது நமது உடலில் 200 தசைகள் செயல்படுகின்றன.
* நமது கண்விழியின் சராசரி எடை 28 கிராம் இருக்கும்.
* தும்மும் போது நமது கண்களை திறந்து வைத்திருக்க முடியாது. மூக்குத் துவாரங்களை மூடிக்கொண்டு முனக முடியாது.
* நம்மால் வாசனை பிடிக்க முடியாத நிலை அனோஸ்மியா எனப்படுகிறது. அதிகமாக வாசனை பிடிக்கும் சக்தியை ஹைபரோஸ்மியா என்கிறார்கள்.
* நமது உடலில் 'உவுலா' என்ற உறுப்பு எங்கிருக்கிறது தெரியுமா? அடிநாக்கு பகுதியில் நாக்கின் மேற்புறம் காணப்படும் சிறுதசையே 'உவுலா' எனப்படுகிறது. நாம் இதனை உள்நாக்கு என்கிறோம். மனித உடலில் உள்ள உறுதியான தசை நமது நாக்குதான்.
* பிறக்கும் போது நமது உடலில் 300 எலும்புகள் இருக்கின்றன. ஆனால் வளர்ச்சி அடைந்த மனித உடலில் 206 எலும்புகளே உள்ளன. பல எலும்புகள் ஒன்றிணைந்து விடுவது தான் இதற்கு காரணம்.
* எலும்புகள் வலிமையானவை என்று எண்ணுகிறீர்களா? அதன் வெளிப்புறமே கடினமானது. உப்புறம் எலும்புகள் மென்மையாகத்தான்இருக்கும். ஏனெனில் எலும்புகள் 75 சதவீதம் தண்ணீரால் ஆனது. மனித எடையில் எலும்புகளின் பங்கு 14 சதவீதமாகும்.
* நமது ரத்தம் தண்ணீரை விட 6 மடங்கு அடர்த்தியானது. பெண்களின் உடலில் 4.5 லிட்டர் ரத்தமும், ஆண்களின் உடலில் 5.6 லிட்டர் ரத்தமும் காணப்படுகிறது.
* நமது உடலில் உள்ள ரத்த நாளங்களை ஒன்றிணைத்தால் 60 ஆயிரம் மைல்கள் நீளத்திற்கு இருக்கும்.
* சிறுநீரகம் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை சுத்திகரிக்கிறது. தினமும் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது
.* ஒவ்வொரு மனிதனின் கைரேகையைப் போலவே கால்ரேகை மற்றும் நாக்கு ரேகைகள் தனித்தன்மை வாய்ந்தவை.

                         Image result for welcome images