Monday, 16 March 2020

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கவனம் சார்ந்து உடல் நலம் பேணுதல் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

இன்று(16.03.2020)  வேடபாளையம் , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கவனம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. பாதுகாப்பு மற்றும் கவனம்  சார்ந்து
 மாணவர்களுக்கும் , பெற்றோர்களுக்கும் தெளிவாக விளக்கப்பட்டது.இந்நிகழ்வில் உடல் நலம் பேணுதல் என்ற தலைப்பில் ஊட்டச்சத்து மிகுந்த காய்கறிகள், பழங்கள்,பயிறு வகைகள்,தானியங்கள்,பால்,முட்டை போன்ற பொருட்களை கொண்டு  ஊட்டச்சத்து கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள் , மாணவர்கள், பெற்றோர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.












Friday, 13 March 2020

மகளிர் தின கொண்டாட்டம் - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வேடபாளையம்.

இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வேடபாளையம் பள்ளியில்  மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது .இதில் மாணவர்கள்   பேச்சு, கவிதை ,பாட்டு , நாடகம் மூலம் தங்கள் திறமையை வெளிப்படுத்தி மகளிர் தினத்தை கொண்டாடினார்கள்.