Tuesday, 1 December 2015

இன்று (2/12/2015) மழை காரணமாக விடுமுறை விடப்பட்ட மாவட்டங்கள்

இன்று (2/12/2015) மழை காரணமாக விடுமுறை - 9 மாவட்டங்கள் 

  1. வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  2. திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 
  3. திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 
  4. நாகை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
  5. சென்னை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
  6. திருவள்ளூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
  7. காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
  8. விழுப்புரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
  9. கடலூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
  10. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

2016 Tamilnadu Govt - Holidays List


பொது விடுமுறை நாட்கள் 2016 ல் எவ்வளவு; அரசு அறிவிப்பு

வரும், 2016ம் ஆண்டுக்கு, 23 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.அவற்றின் விபரம்:
* வங்கிகள் ஆண்டு கணக்கு முடிப்பு விடுமுறை, தமிழகத்தில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும் பொருந்தும்.
* தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள, அனைத்து அலுவலகங்களுக்கும், அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை.
* அரசு பொது விடுமுறை நாள், நான்கு ஞாயிற்றுக் கிழமையிலும், இரண்டு சனிக்கிழமையிலும் வருகிறது.
* பொங்கல் பண்டிகைக்கு, தொடர்ந்து மூன்று நாள் விடுமுறை
* அக்டோபரில், தொடர்ந்து மூன்று நாட்கள் உட்பட, 5 நாட்கள் விடுமுறை வருகிறது.
* 2015ம் ஆண்டு, 24 நாட்கள் அரசு பொது விடுமுறை நாட்கள்; 2016க்கு, 23 நாட்கள் மட்டுமே. அதிலும், வங்கி கணக்கு முடிப்பு நாள், நான்கு ஞாயிறு, இரண்டு சனிக்கிழமை, ஆகியவற்றை நீக்கினால், 16 நாட்கள் மட்டுமே, பொது விடுமுறை நாட்களாக உள்ளது.

அறிவியல் விருது தேதி நீட்டிப்பு

அறிவியல் விருது தேதி நீட்டிப்பு

அறிவியல் நகரம் சார்பில், 2014ம் ஆண்டுக்கான, 'தமிழ்நாடு இளம் அறிவியல் ஆய்வாளர் விருது' மற்றும், 'தமிழ்நாடு வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருது' பெற, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், டிச., 4ம் தேதி வரை, அறிவியல் நகரத்தில் பெறப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கனமழை காரணமாக, காலக்கெடு, 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவம், விதி மற்றும் விவரம், அறிவியல் நகரம் இணையதளத்தில் www.sciencecitychennai.in வெளியிடப்பட்டுள்ளது.

டிசம்பர் -2 சர்வதேச அடிமை ஒழிப்பு தினம்

அடிமை என்கிற நிலை இன்னும் தொடர்கிறது என்பதை ஐ.நா. சபை உறுதி செய்துள்ளது. ஆகவே 2002ஆம் ஆண்டு டிசம்பர் 18 அன்று ஒரு தீர்மானத்தின்மூலம் டிசம்பர் – 2ஐ சர்வதேச அடிமை ஒழிப்பு தினமாக ஐ.நா. அறிவித்தது. பெண்கள் மற்றும் குழந்தைகளை அடிமை முறையிலிருந்து காப்பாற்ற, தடுக்க மனித உரிமை ஆணையங்களைப் பலப்படுத்த வேண்டும் என ஐ.நா. கூறுகிறது.

பண்டிகை முன்பணம் (FESTIVAL ADVANCE) - விண்ணப்பம்

மாற்றுத்திறனாளிகள் தினம் விடுப்பு

G.O Ms 72 :சமூகநலம் - சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் DEC .3 - மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு DEC 03 அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் - அரசானை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அனைத்து பள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டிகள் - கடைசி நாள் 15/12/2015