Tuesday, 19 January 2016

TNOU-JANUARY 2016 TEE HALL TICKET PUBLISHED...

TNOU-JANUARY 2016 TEE HALL TICKET PUBLISHED...



உலகம் முழுவதும் இனி 'வாட்ஸ் ஆப்' இலவசமாகிறது; வருடாந்திர சந்தா கட்டணம் ரத்து

பிரபல சமூக வலைத்தளமான 'வாட்ஸ் ஆப்'-ஐ உலகம் முழுவதும் 100 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். தனது நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதற்கு பெரும்பாலும் இதை சார்ந்தே பலரும் இருக்கிறார்கள். 


தற்போது வரை வாட்ஸ் ஆப்-க்கு ஓராண்டுக்கு பிறகு பயன்படுத்த ஆண்டு ஒன்றுக்கு 1 டாலர் சந்தா கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இனி இந்த கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது. இன்னும் சில வாரங்களில் வாட்ஸ் ஆப்பின் அனைத்து பதிப்புகளுக்கு கட்டணம் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது. 


கடந்த 2014-ம் ஆண்டு 19 பில்லியன் டாலருக்கு வாட்ஸ் ஆப்-ஐ பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது. 

Tuesday, 12 January 2016

National ICT Awards for School Teachers-2016

National ICT Awards for School Teachers-2016

IT Tax Form 2015-16

அகஇ - தொடக்க/நடுநிலை/உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் வாசித்தல் திறன் ஆய்வு - வாசித்தலே எல்லை - பள்ளிகளில் ஆய்வு செய்ய மாநில திட்ட இயக்குனர் உத்தரவு - பள்ளிகள் தேர்வு செய்யப்படும் முறை மற்றும் செயல்முறைகள்

அகஇ - தொடக்க/நடுநிலை/உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் வாசித்தல் திறன் ஆய்வு - வாசித்தலே எல்லை - பள்ளிகளில் ஆய்வு செய்ய மாநில திட்ட இயக்குனர் உத்தரவு - பள்ளிகள் தேர்வு செய்யப்படும் முறை மற்றும் செயல்முறைகள்

Saturday, 9 January 2016

உலகின் முக்கிய தினங்கள் - பொது அறிவு தகவல்கள் :

ஜனவரி

12-தேசிய இளைஞர் தினம்
15-இராணுவ தினம்
26-இந்திய குடியரசு தினம்
26- உலக சுங்க தினம்
30- உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
30 -தியாகிகள் தினம்

பிப்ரவரி

14 - உலக காதலர் தினம்
25- உலக காசநோய் தினம்
24 தேசிய காலால் வரி தினம்
28- தேசிய அறிவியல் தினம்

மார்ச்

08 - உலக பெண்கள் தினம்
15 - உலக நுகர்வோர் தினம்
20 - உலக ஊனமுற்றோர் தினம்
21 - உலக வன தினம்
22 - உலக நீர் தினம்
23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
24 - உலக காசநோய் தினம்
28 - உலக கால்நடை மருத்துவ தினம்


ஏப்ரல்

05 - உலக கடல் தினம்
05 - தேசிய கடற்படை தினம்
07 - உலக சுகாதார தினம்
12 - உலக வான் பயண தினம்
18 - உலக பரம்பரை தினம்
22 - உலக பூமி தினம்
30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம்

மே

01 - உலக தொழிலாளர் தினம்
03 - உலக சக்தி தினம்
08 - உலக செஞ்சிலுவை தினம்
11 தேசிய தொழில் நுட்ப தினம்
12 - உலக செவிலியர் தினம்
14 - உலக அன்னையர் தினம்
15 - உலக குடும்ப தினம்
16 - உலக தொலைக்காட்சி தினம்
24 - உலக காமன்வெல்த் தினம்
29 - உலக தம்பதியர் தினம்
31 - உலக புகையிலை மறுப்பு தினம்

ஜீன்

04 - உலக இளம் குழந்தைகள் தினம்
05 - உலக சுற்றுப்புற தினம்
18 - உலக தந்தையர் தினம்
23 - உலக இறை வணக்க தினம்
26 - உலக போதை ஒழிப்பு தினம்
27 - உலக நீரழிவாளர் தினம்
28 - உலக ஏழைகள் தினம்

ஜீலை

01 - உலக மருத்துவர்கள் தினம்
11 - உலக மக்கள் தொகை தினம்

ஆகஸ்ட்

01 - உலக தாய்ப்பால் தினம்
03 - உலக நண்பர்கள் தினம்
06 - உலக ஹிரோஷிமா தினம்
09 -வெள்ளையனே வெளியேறு தினம்
09 - உலக நாகசாகி தினம்
18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்
29 -தேசிய விளையாட்டு தினம்

செப்டம்பர்

05-ஆசிரியர் தினம் மற்றும் சமஸ்கிருத தினம்
08 - உலக எழுத்தறிவு தினம்
16 - உலக ஓசோன் தினம்
18 - உலக அறிவாளர் தினம்
21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
27 - உலக சுற்றுலா தினம்

அக்டோபர்

01 - உலக மூத்தோர் தினம்
02 - உலக சைவ உணவாளர் தினம்
04 - உலக விலங்குகள் தினம்
05 - உலக இயற்கைச் சூழல் தினம்
08 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
08 இந்திய விமானப்படை தினம்
09 - உலக தபால் தினம்
16 - உலக உணவு தினம்
17 - உலக வறுமை ஒழிப்பு தினம்
24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
30 - உலக சிந்தனை தினம்

நவம்பர்

14-குழந்தைகள் தினம்
18 - உலக மனநோயாளிகள் தினம்
19 - உலக குடியுரிமையாளர்கள் தினம்
26 - உலக சட்ட தினம்

டிசம்பர்

01 - உலக எய்ட்ஸ் தினம்
02 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
10 - உலக மனித உரிமைகள் தினம்
14 - உலக ஆற்றல் தினம்
23- விவசாயிகள் தினம்

புத்தகங்களில் வரும் சோட்டா பீம்: கணிதம், ஆங்கிலம் கற்க உதவும் பீம்:

சோட்டா பீம் கதாபாத்திரத்துடன், தொலைக்காட்சியில் வரும் தொடர்களையே பார்த்துகொண்டிப்பதால், குழந்தைகள் பாடங்களில் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு விரைவில் முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.

சோட்டா பீம் கதாபாத்திரத்தை உருவாக்கிய கிரீன் கோல்ட் அனிமேஷன் நிறுவனத்துடன், படக்கதையுடன் புத்தகங்கள் வெளியிடும் நிறுவனமான டார்லிங் கின்டர்ஸ்லே கூட்டு சேர்ந்துள்ளது. இதன்படி, சோட்டா பீம் கதாபாத்திரம் இடம்பெறும் வகையில் 12க்கும் அதிகமான புத்தகங்களை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த புத்தகங்களில் விளையாட்டாக ஆங்கிலம்கற்கவும், அதே வகையில் கணிதம் கற்கவும் ஏற்ற வகையில் கருத்துரு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 முதல் 5 வயது குழந்தைகளுக்கு தனியாகவும், 5 முதல் 7 வயது வரையானவர்களுக்கு தனியாகவும் இந்த புத்தகங்கள் தயாராகி வருகின்றன. இது தவிர, குழந்தைகள் கற்றுக் கொள்ள ஏற்ற வகையில் எழுதுதல், வரைதல், வண்ணம் தீட்டுதல் போன்ற பல்வேறு செயல்பாடுகள் கொண்டதாக 104 பக்க அளவில் சோட்டா பீமும், நானும் என்ற பெயரிலும் ஒரு புத்தகம் தயாராகி வருவதாக தெரிகிறது.சோட்டா பீம் கதாபாத்திரம் தொடர்பான முழுமையான பின்னணி கொண்ட தகவல் களஞ்சியம் ஒன்றும் வெளியிடப்பட உள்ளதாக இந்த கூட்டு நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.